என் செல்லக் குட்டி தனிஷ்
0
“கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை;
கொஞ்சம் முழிப்பு, கொஞ்சம் தூக்கம்;
கொஞ்சல் சத்தம் இதமாய் கேட்கும்;
கெஞ்சும் அழுகை பசிக்கு மட்டும்;
பிஞ்சு கால்கள் எட்டி உதைக்கும்,
என் நெஞ்சச் சுமைகள் பஞ்சாய் பறக்கும்;
பவள இதழ்களின் புன்னகை போதும்
எண்ணங்கள் யாவும் சரித்திரம் படைக்கும்;”
- கோகுல்
