எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் ஓன்றாய் இணைந்தோம் அன்பால் கலந்தோம் நம் மணம் முன் ஜன்மத்துப் பந்தம் என்றே உவகை கொண்டேன்! என் வாழ்க்கையில் வானவில்லாக தோன்றி மறைந்தாய் என்னை விட்டு நீ நீங்கிய தருணங்கள் உன் நினைவுகள் எனக்கு சொந்தம் உறக்கதிலும் விழித்து கிடக்கும் உன் ஞாபகங்கள் எனை விளிப்பில் இருத்தும் காலம் உனக்கு உண்மையை உணர்த்தும் நேரம் மாய வலைகள் விலகி தெளிவு கொள்வாய் இதயத்தின் ஓரத்தில் ஓளிந்திருக்கும் மென்மையான நினைவுகள் - உணர்வுகளால் உந்தப்பட்டு இருவரையும் திரும்பி பார்க்கச் சொல்லும் அது - நமக்குள் பிரிவு என்றும் இல்லை நம் உறவை பலப்படுதும் உண்மையான நேசம் என உணர்த்தும்...
ஈரமான நினைவுகள்
Posted: ஜூலை 31, 2011 by Gokul Amarnath in கவிதைகுறிச்சொற்கள்:உறவு, கவிதை, காதல், ஞாபகம், தனிமை, நினைவுகள், பிரிவு, மனைவி
0
