எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் ஓன்றாய் இணைந்தோம் அன்பால் கலந்தோம் நம் மணம் முன் ஜன்மத்துப் பந்தம் என்றே உவகை கொண்டேன்! என் வாழ்க்கையில் வானவில்லாக தோன்றி மறைந்தாய் என்னை விட்டு நீ நீங்கிய தருணங்கள் உன் நினைவுகள் எனக்கு சொந்தம் உறக்கதிலும் விழித்து கிடக்கும் உன் ஞாபகங்கள் எனை விளிப்பில் இருத்தும் காலம் உனக்கு உண்மையை உணர்த்தும் நேரம் மாய வலைகள் விலகி தெளிவு கொள்வாய் இதயத்தின் ஓரத்தில் ஓளிந்திருக்கும் மென்மையான நினைவுகள் – உணர்வுகளால் [...]
‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு
ஈரமான நினைவுகள்
Posted: ஜூலை 31, 2011 by Gokul Amarnath in கவிதைகுறிச்சொற்கள்:உறவு, கவிதை, காதல், ஞாபகம், தனிமை, நினைவுகள், பிரிவு, மனைவி
என் செல்லக் குட்டி தனிஷ்
Posted: மார்ச் 16, 2011 by Gokul Amarnath in கவிதைகுறிச்சொற்கள்:affection, கவிதை, கோகுல், தனிஷ், பாசம், gokul amarnath, kid, Love, tamil, Tamil kavithai, Tanesh, Tanesh Gokul Amarnath
“கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை; கொஞ்சம் முழிப்பு, கொஞ்சம் தூக்கம்; கொஞ்சல் சத்தம் இதமாய் கேட்கும்; கெஞ்சும் அழுகை பசிக்கு மட்டும்; பிஞ்சு கால்கள் எட்டி உதைக்கும், என் நெஞ்சச் சுமைகள் பஞ்சாய் பறக்கும்; பவள இதழ்களின் புன்னகை போதும் எண்ணங்கள் யாவும் சரித்திரம் படைக்கும்;”
இமைக்க மறந்தேன்…
Posted: நவம்பர் 25, 2008 by சகா. சதீஷ் in கவிதைகுறிச்சொற்கள்:இமைக்க மறந்தேன், கண், கவிதை
அது என்னவோ தெரியவில்லை; உன்னை பார்க்கும்போதுமட்டும் என் இமைகள் இரண்டும் திறந்த நிலையிலேயே இறந்து விடுகின்றன…. – சகா. சதீஷ்
இலையுதிர் காலம்…
Posted: நவம்பர் 24, 2008 by சகா. சதீஷ் in கவிதைகுறிச்சொற்கள்:அவசியம் வரவும், இலையுதிர் காலம்..., கவிதை
நத்தைபோல் இரவு மெத்தை மேல் நானோ விடியாத இரவோடு விரோதம் கொண்டு, விடியலை நோக்கி விரதம் பூண்டிருந்தேன்… எண்ணக்குவியல்கள் என்னை தின்று தீர்த்த வேளை விரதம் ஏற்று, சற்றெ கருணை காட்டினான் கதிரவன் அப்பாடா! இத்தனை நாள் கட்டில் போராட்டத்திற்கு இன்றுதான் விடுதலையோ! என்னில் ஏதோ விறுவிறுப்பு, பரபரப்பு மாறாக சுறுசுறுப்பு! புறப்பட்டேன்! புறப்பட்டேன்! – என் ஆசைக் கனவுகளின் அர்த்தம் தெரிய புறப்பட்டேன்! பேருந்திற்கும் கூட என் வேகம் புரியவில்லை போலும், மிகுந்த போராட்டத்திற்கு பிறகே, [...]
மரம் தேடும் மழைத்துளி
Posted: நவம்பர் 23, 2008 by Arangaperumal in கவிதைகுறிச்சொற்கள்:கவிதை, lover, Tamil kavithai
அமைதியாத்தான் போய்க்கொன்டிருந்தது வாழ்க்கை.கட்டுப்பாடற்ற நதியாய்,வேலியற்ற காற்றாய்.எதற்கும் கலங்கியதுமில்லை.கவலைப்பட நேரமும் இருந்ததில்லை.நேரத்துடன் உறங்கியதுமில்லை.பொழுதுடன் எழுந்ததுமில்லை.இப்படியா வாழ்கிறேன் என எண்ணியதுமில்லை. இவையெல்லாம் உன்னை காணூம் வரை. இதுவரை தென்றலை நான் இப்படி ரசித்ததில்லை.காத்திருக்கும் நேரம் அதிகமானது ஆனாலும் சுகமானது.நீ வரும்வரை உன் நினைவுகள் என் துணை,வந்தபின்… எதுவும் எனக்கு நினைவில்லை.அதுவரை மெதுவாக போய்க் கொண்டிருந்த நேரம் உன்னுடன் இருக்கையில் அத்தனை வேகமாக நகரும்.வாழ்க்கையின் இன்பம் இதுவென எண்ணியிருந்தேன்.தூக்கம் மறந்தேன்,பசி மறந்தேன்.வாழ்த்து அட்டைக்கென கடைகடையாய் ஏறி இறங்கினேன்.உனக்கென பல கவிதை படித்தேன். எந்த கவிதையும் பிடிக்கவில்லை [...]
காதலிக்கு…
Posted: நவம்பர் 20, 2008 by Arangaperumal in இலக்கியம், கவிதைகுறிச்சொற்கள்:கவிதை, lover, Tamil kavithai
காத்திருப்பதை அறிந்து களிப்புரவில்லை கசிந்துருக மனமிருந்தும் காலம் கனியவில்லை காத்திருப்பதும் எதிர்பார்த்துருப்பதும் சுகமானதுதான் விளைவுகள் சாதகமாகுமென்றால். ஒவ்வொரு விடியலிலும் சாதிப்பதைப் பற்றி ஆயிரம் கனவுகள் ஒவ்வொரு இரவிலும் சலிப்பான நினைவுகள் மட்டுமே நிச்சயம். நொறுங்கிய நினைவுகள் நெருங்கி வரும்போது தடுத்தாட் கொள்வது உன் நினைவுகள் மட்டுமே உணர்வுகளால் தாக்குன்டதால் வார்த்தைகளுக்கு இங்கு பஞ்சம் இதை உணர வேண்டும் உனது நெஞ்சம். – அரங்கப்பெருமாள்
மின்சாரம் பாயுதே..
Posted: நவம்பர் 20, 2008 by சகா. சதீஷ் in கவிதைகுறிச்சொற்கள்:கவிதை, மின்சாரம் பாயுதே
அணுவில் மின்சாரம், நீரில், நிலக்கரியில் மின்சாரம், காற்றில் மின்சாரம் – ஏன் குப்பைக் காகிதத்தில் கூட மின்சாரம் கண்டறிந்த வல்லுநன் – ஏனோ அவள் கண்களை மட்டும் இன்றுவரை கண்டுகொள்ளவே இல்லை…. – சகா. சதீஷ்